கர்ப்பிணிகளின் உணவுப்பழக்கம் எப்படி இருக்கணும்?

கர்ப்பகாலத்தில் நீரிழிவு, ரத்த அழுத்தம், ரத்த சோகை வரும் வாய்ப்பு அதிகம்.

எனவே தொடர் கண்காணிப்பு, பரிசோதனை அவசியம்.

காய்கறி, முட்டை, பால், பழங்கள் அதிகமாகவும் இனிப்பு, கிழங்கு, எண்ணெய் பதார்த்தங்கள் குறைவாகவும் உட்கொள்ள வேண்டும்.

வயிற்றில் இருக்கும் போது குழந்தை பெரிதாகி ஆப்ரேஷன் தேவைப்படுமோ என பயந்து உணவைக் குறைக்கக்கூடாது.

சத்தான சரிவிகித உணவு சாப்பிட வேண்டும். உப்பைக் குறைக்க வேண்டும்.

அதிக புரோட்டின் சத்துள்ள உணவுகளைச் சேர்த்துக் கொள்ளுங்கள்.

நிறைய தண்ணீர் குடிப்பது மிகவும் அவசியமானது.