நம் உடலில் உள்ள நீர்ச்சத்து குறையும்போது தோல் வறண்டு, பாதத்தில் வெடிப்பு ஏற்படும்.

தினமும் வெதுவெதுப்பான தண்ணீரில், பாதத்தைக் கழுவி வரவேண்டும் இதனாலேயே வெடிப்பு ஏற்படாமல் தவிர்க்கலாம்.

குளிக்கும் போது கண்டிப்பாக சொரசொரப்பான கற்களில் பாதங்களை நன்கு தேய்க்க வேண்டும். இதனால் இறந்த செல்கள் நீங்கும். தோலும் வலிமை பெறும்.

உடலில் நீர்ச்சத்துக் குறையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். தினமும் 8 முதல் 10 டம்ளர் நீர் பருக வேண்டும். வெடிப்பு அதிகம் இருந்தால் கூடுதலாக நீர் அருந்த வேண்டும்.

உணவில் அதிகமாக நீர்ச்சத்து நிறைந்த காய்கறிகள், பழங்களை சேர்த்துக்கொள்ள வேண்டும்.

இரவில்பாதத்தைத் தண்ணீரில் நன்றாகக் கழுவி சுத்தம்செய்து மாய்ஸ்ச்சரைசர் பயன்படுத்தினால் வெடிப்பு தடுக்கப்படும். தேவைப்பட்டால் சாக்ஸ் கூட அணியலாம்.

பெட்ரோலியம் ஜெல்லி, தேங்காய் எண்ணெய், ஆலிவ் எண்ணெய் போன்றவற்றை மாய்ஸ்ச்சரைசராகப் பயன்படுத்தினால் நல்ல பலன் கிடைக்கும்.