நம்மிடமே இருக்கு மருந்து - முருங்கை கீரை!
முருங்கை இலையில் கால்சியம், இரும்பு, வைட்டமின் ஏ, சி சத்துக்கள் நிறைய உள்ளன.
சத்தில்லாத குழந்தைகள், முருங்கை சூப் தினமும் அருந்தினால் பலம் பெற்று ஆரோக்கியம் பெறுவது உறுதி.
பாலுாட்டும் பெண்கள், தினமும் முருங்கை கீரையை சாப்பிட்டால், அதிகமாக பால் ஊறும்.
ஆண்மை விருத்திக்கு முருங்கை சூப் உதவும்.
அலர்ஜியால் துன்பப்படுவோருக்கு, முருங்கை கீரை உன்னத மருந்து.
மாலைக்கண் நோய்க்கு இதன் சாற்றை தேனுடன் சேர்த்து பருகி, பயன் பெறலாம்.
காயங்களின் மேல் வறுத்த முருங்கை இலையின் பொடியை பூசினால், வலி குறையும்.