பக்கவாதம் ஏற்பட்ட பிறகு என்ன செய்ய வேண்டும்?
பக்கவாதம் ஏற்பட்ட 4 மணி நேரத்திற்குள் ரத்த உறைவை உடைக்கும் மருந்துகளை தர வேண்டும். 24 மணி நேரத்திற்குள் ரத்தக் கட்டிகளை அகற்ற வேண்டும்.
பல நேரங்களில், பக்கவாதத்திற்கு சில நாட்கள், ஏன் வாரங்களுக்கு முன்பு பலவீனம், தற்காலிக பார்வை இழப்பு, பேசுவதில் சிரமம் போன்ற எச்சரிக்கை அறிகுறிகள் தெரியும்.
இதயத்தை போல மூளையின் தமனிகளிலும் இதே போன்ற அடைப்புகள் ஏற்படலாம்.
மூளையின் ரத்தக் குழாய்களில் கொழுப்பு படிவுகள் மூளைக்கு ரத்தத்தை வழங்கும் தமனிகளை சுருக்குகின்றன.
இதயத்தில் பாதிப்பு ஏற்பட்டால் வலிக்கும் ஆனால், மூளை வலியை உணராது. எனவே ஆரம்ப அறிகுறிகளை சிலர் கவனிப்பதில்லை.
உலகம் முழுவதும் பக்கவாத வடிவங்கள் வேறுபடுகின்றன. மேற்கத்திய நாடுகளில், கழுத்து தமனிகளில் அடைப்புகள் ஏற்படுகின்றன.
ஆசிய மக்களில் 30 - 50 சதவீதம் பேருக்கு மூளையில் உள்ள தமனிகளில் கொழுப்பு படிவதால் இஸ்கிமிக் பக்கவாதம் ஏற்படுகிறது.