முதல் கர்ப்பமா? உங்களுக்கான சில யோசனைகள்…
முதலில் ஒரு பெண் கர்ப்பம் என அறிந்தவுடன் அருகிலுள்ள மருத்துவமனைக்கு சென்று கர்ப்பத்தை உறுதி செய்ய வேண்டும்.
டாக்டரின் ஆலோசனைபடி முதல் மூன்று மாதங்களுக்கு கர்ப்பப்பதிவு எண், ரத்தப் பரிசோதனைகள், ஸ்கேன், போலிக் ஆசிட் மாத்திரைகள், உணவு முறைகளை பின்பற்ற வேண்டும்.
மாதந்தோறும் கர்ப்பகால பரிசோதனைக்கு செல்ல வேண்டும். சுயமாக மருந்து உட்கொள்ள கூடாது.
கர்ப்பகாலத்தில் வரக்கூடிய ரத்த அழுத்தம், நீரிழிவு நோய், தைராய்டு பிரச்னைகள், ரத்தசோகை குறித்த ஆலோசனைகளுக்கு டாக்டரின் ஆலோசனையின்றி மாத்திரைகளை உட்கொள்ளவோ, நிறுத்தவோ கூடாது.
துரித மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளை உட்கொள்ள கூடாது.
பழங்கள், வீட்டில் சமைத்த உணவு, வேகவைத்த காய்களை சூடாக உண்ண வேண்டும்.
தலை சுற்றல், அதிகப்படியான வாந்தி, அடிவயிற்று வலி, கால் வீக்கம், இரட்டை பார்வை, கண்பார்வை மங்குதல், ரத்தப் போக்கு,போன்ற அறிகுறி தென்பட்டால் மருத்துவமனைக்கு செல்லவும்.