பற்கள் ஆடுவதற்கான காரணமும் சிகிச்சையும்!

பற்கள் ஆடுவதற்கு காரணம் அதனை சுற்றி உள்ள ஈறுகளும் எலும்பும் தேய்ந்து பற்களுக்கு பிடிமானம் இல்லாமல் போவது.

பெரும்பான்மையாக ஈறு நோய்களாலும் சில நேரங்களில் கோணலான பல் வரிசையினாலும் இது போன்று தேய்மானம் ஏற்படும்.

அப்பொழுது இரண்டு வரை சிகிச்சை (Two-stage treatment) முறைகளை ஒரே நேரத்தில் செய்ய வேண்டும்.

ஒன்று பற்களின் உட்புறத்தில் இருந்து அழுக்கு மற்றும் கிருமிகளை சுத்தம் செய்ய வேண்டும்.

மற்றொன்று பற்களின் வெளிப்புறத்தில் 'ஸ்ப்லின்டிங்' எனப்படும் சிகிச்சை செய்ய வேண்டும்.

இம்முறையில் ஆடும் பற்களை அதற்கு இருபுறமும் உள்ள பற்களுடன் இணைத்து விட வேண்டும்.

இப்படி செய்யும் பொழுது பற்கள் நிலையாக இருக்கும்.