கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்தும் உணவுகள்

கொலஸ்ட்ரால் அதிகரித்தாலே உடலில் எதோ ஒரு பாதிப்பு வரக்கூடும். குறிப்பாக இதய செயல்பாட்டில் அதிக அளவில் பாதிப்பை ஏற்படுத்தும்

நம் உடலில் நல்ல கொலஸ்ட்ரால் எப்போதும் அதிகமாகவும், கெட்ட கொலஸ்ட்ரால் குறைவாகவும் இருக்க வேண்டும்.

ஆரோக்கியமற்ற ஜங்க் புட்டை குறைத்து சரிவிகித சத்தான உணவுப் பழக்கத்தைக் கடைப்பிடிப்பதன் மூலம் நல்ல அதிகப்படுத்த முடியும்.

ஹெச்டிஎல் கொலஸ்ட்ரால் அதிகம் உள்ள பாதாம், வால் நட், போன்ற பருப்பு வகைகள், மற்றும், பூசணி, வெள்ளரி விதைகள் போன்றவைகளை அதிகம் எடுத்து கொள்ள வேண்டும்.

முழு தானியங்களை சாப்பிட்டு வந்தால் கொலஸ்ட்ரால் குறையும். குறிப்பாக சிறுதானியங்களான தினை, கேழ்வரகு, கம்பு, சாமை போன்றவற்றை அதிகம் உட்கொள்ள வேண்டும்.

நார்ச்சத்து அதிகம் உள்ள பச்சை காய்கறிகள் மற்றும் ஆப்பிள், வாழைப்பழம், ஆரஞ்சு மற்றும் பேரிக்காய் போன்ற பருவகால பழங்களை சாப்பிடலாம்.

பூண்டில் அலிசின் என்னும் ஆன்டி ஆக்சிடன்ட் உள்ளது. தினமும் காலையில் இரண்டு பல் பூண்டை தோல் உரித்து பச்சையாக சாப்பிடலாம்.

அசைவ பிரியர்கள் அதிக அளவில் மீனை எடுத்துக்கொள்ளலாம். மீனில் உள்ள ஒமேகா-3 கொழுப்பு அமிலம் கொலஸ்ட்ரால் அளவை சமநிலைப்படுத்த உதவுகிறது.