உயிருடன் இருக்கும்போது கல்லீரல் தானம் செய்யலாமா?
கல்லீரல் தானத்தில் இரண்டு வகை உண்டு. உயிருடன் இருப்பவரும் தானம் செய்யலாம், இறக்கும் தருவாயில் உள்ளவர்களும் தானம் செய்யலாம்.
ஒரு கல்லீரல் தான் இருக்கிறது என்பதால் உயிருடன் இருப்பவர் தானம் செய்வது சாத்தியமா என யோசிக்க வேண்டாம்.
நமது உடலில் கல்லீரலின் எடை 1500 கிராம் முதல் 1800 கிராம் வரை இருக்கும்.
உடல் எடை, உயரத்திற்கு ஏற்றவாறு 30 முதல் 50 சதவீத அளவு கல்லீரலே நமக்கு போதுமானது. மீதி பகுதியை மற்றவர்களுக்கு தானம் செய்யலாம்.
தானம் பெறுபவர் 30 முதல் 40 சதவீதம் வரை தானம் பெறுவர்.
ஆரோக்கியமான
55 வயதிற்குட்பட்ட நபர், ஒரு குறிப்பிட்ட பகுதியை தானம் செய்தால் 6
மாதங்களில் கொடுத்தவருக்கும், அதை பெற்றவருக்கும் மீதி கல்லீரல்
வளர்ந்துவிடும்.
மூளைச்சாவு அடையும் நோயாளிகளிடம் இருந்து கல்லீரல் முழுமையாக எடுக்கப்பட்டு தேவைப்படும் நோயாளிக்கு பொருத்தப்படும்.