வேர்கடலை சாப்பிடுவதால் பித்தம் அதிகரிக்குமா?
100 கிராம் வேர்கடலையில், 13-15% கார்போஹைட்ரேட், 22-25% புரோட்டின், 45-55% கொழுப்பு சத்துகள் உள்ளது.
இதிலுள்ள கொழுப்புகளில் 70 சதவீதம் நன்மை விளைவிக்கக்கூடிய கொழுப்பு சத்துகள் தான் உள்ளது. இதனால் உடலில் கொழுப்பு சத்தை அதிகரிக்காது.
இதில் பாதாம் பருப்பை விட இரண்டு மடங்கு அதிகம் சத்துகள் உள்ளன. ஜிம் செல்லும் இளைஞர்கள் வேர்கடலையை சாப்பிட்டு வந்தால் எலும்புகள் வலுப்பெறும்.
கர்ப்பிணிகள் தினமும் ஒரு கப் வேக வைத்த வேர்கடலையை எடுத்துக்கொள்வதனால், குழந்தையின் மூளை வளர்ச்சிக்கு தேவையான போலிக் அமிலம் கிடைக்கும்.
வேர்கடலையில் குறைந்த அளவு கார்போஹைட்ரேட் உள்ளதால், பிசிஒடி பிரச்னை உள்ளவர்கள், நீரிழிவு நோயாளிகள், இதய நோய், கொலஸ்ட்ரால் பாதிப்பு உள்ளவர்கள் சாப்பிடலாம்.
செரிமான பிரச்னை, சொரியாசிஸ், வாத நோய் உள்ளவர்கள் வேர்கடலை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.
மேல் குறிப்பிட்ட பிரச்னை உள்ளவர்கள் வேர்கடலை சாப்பிட நினைத்தால், சிறிது நேரம் ஊற வைத்து, வேகவைத்து அதனுடன் உப்பு, பெருங்காயம், உள்ளிட்டவற்றை சேர்த்து சாப்பிடலாம்.
வறுத்த வேர்கடலையாக இருந்தால், சர்க்கரை சேர்த்து சாப்பிட்டால் பித்தம் அதிகரிக்காது.
கிராமப்புறங்களில் பச்சை வேர்கடலையை வேக வைக்கும் போது, தும்பை இலையை சேர்த்து வேக வைப்பார்கள். இப்படி செய்வதன் மூலம், வாத,பித்தம் அதிகரிப்பை கட்டுப்படுத்தும். இந்த முறையையும் பயன்படுத்தி வேகவைத்து சாப்பிடலாம்.
இவர்களை தவிர அனைவரும் வேர்கடலையை தொடர்ந்து சாப்பிட்டால், பித்தம், கொழுப்பு உள்ளிட்ட பிரச்னைகளை அதிகரிக்காது.