வெள்ளை மொச்சை, கறுப்பு மொச்சை, சிவப்பு மொச்சை, மர மொச்சை மற்றும் நாட்டு மொச்சை என, பல வகைகள் உள்ளன.

தையமின், வைட்டமின் ஏ, சி, கே மற்றும் பி6, தாமிரம், செலினியம், இரும்புச்சத்து, நியசின், ரிபோப்ளேவின், கோலின், சோடியம், துத்தநாகம், பொட்டாஷியம் மற்றும் மாங்கனீசு போன்ற ஊட்டச்சத்துக்களை கொண்டது.

பெண்களுக்கு தினமும், போலேட் சத்து, 400 எம்.சி.ஜி.,யும், கர்ப்ப காலமாக இருந்தால், 600 எம்.சி.ஜி.,யும் தேவை. மொச்சையில் உள்ள இந்த சத்து, போதுமான அளவு பூர்த்தி செய்கிறது.

அதிகளவில் நார்ச்சத்து நிறைந்துள்ளதால், கர்ப்ப காலத்திலும், மாதவிடாய் போதும், குழந்தை பிரசவித்த முதல் மூன்று மாதங்களிலும், பெண்களுக்கு ஏற்படக் கூடிய மலச்சிக்கலுக்கு, சிறந்த தீர்வாகிறது.

இதிலுள்ள இரும்புச் சத்து, ரத்த சிவப்பணுக்கள் உற்பத்தி மற்றும் ஆற்றல் உற்பத்திக்கு உதவுகிறது. ரத்த சோகை போன்ற இரும்புச்சத்து குறைபாடு மற்றும் உடல் சோர்வு ஆகியவற்றுக்கு சிறந்த உணவாக திகழ்கிறது.

கொலஸ்ட்ரால் அளவைக் குறைத்து, இதய நோய்கள் வராமல் தடுக்கிறது; மெக்னீசியம் அதிகளவு உள்ளதால் ரத்த அழுத்தத்தை குறைக்க உதவுகிறது.

'பார்கின்சன்' நோயைக் கட்டுப்படுத்த, மொச்சையில் உள்ள, 'எல்டோபா' உதவுகிறது.

மொச்சையை வேகவைக்கும் போது, இஞ்சி, பூண்டு சேர்த்து சமைத்தால், வாய்வு தொல்லை ஏற்படாது.