குழந்தைகளுக்கு பல் சொத்தை ஏன் வருகிறது?

கர்ப்பத்தின் 12வது வாரத்தில் துவங்கி, பால் பற்கள் கருவிலேயே உருவாகி, குழந்தை பிறக்கும் போது, மொத்தமும் ஈறுகளுக்குள் இருக்கும். ஒரு வயதிற்கு பிறகே வெளியில் தெரியத் துவங்கும்.

என்ன காரணத்தால் எனாமல் பலவீனமாகி, சொத்தை ஏற்படுகிறது என்பது இதுவரை புரியாத ஒன்று. ஆனால், சொத்தை இருப்பதை ஆரம்பத்திலேயே கண்டுபிடிக்க முடியும்.

குழந்தையின் பற்களை பஞ்சு வைத்து துடைத்தால், வெள்ளையாக படிமம் இருப்பது தெரியும். இது தான் எனாமல் பலவீனமாக இருப்பதன் ஆரம்ப அறிகுறி.

குழந்தை குடிக்கும் பால் இதில் ஒட்டி, 1 மி.மீ., தடிமனே உள்ள எனாமல் நாளடைவில் உடைந்து விடும். எனாமல் என்ற மேலடுக்கில் பல் சொத்தை இருக்கும் வரை எந்த பாதிப்பும் வராது.

எனாமல் உடைந்து, கீழுள்ள பழுப்பு நிற டென்டியில் சூடான, குளிர்ச்சியான பதார்த்தங்கள் படும் போது, 'ஜிவ்' என்ற கூச்ச உணர்வு வரும்.

இதனால், பல் துலக்க முடியாது; கடித்து சாப்பிட முடியாது. குழந்தைக்கு சொல்லவும் தெரியாது.

பால், உணவு ஊட்டிய பின், நீரில் சுத்தமான பஞ்சு, வலை துணியை நனைத்து பற்களைத் துடைப்பது, சொத்தை வராமல் தடுக்கும் எளிய வழி.

ஒரு வயது குழந்தைகளை பல் டாக்டரிடம் பரிசோதித்தால், பல் சொத்தை இருப்பதை துவக்கத்திலேயே கண்டறிய முடியும்.