பொடுகு தொல்லையை விரட்ட உதவும் எண்ணெய் தேய்க்கும் பழக்கம்!!

பொதுவாக தலையில் வறட்சி இருந்தால் பொடுகுத்தொல்லை வரும்.

அதை போக்க காலை அல்லது மாலை 5:00 மணிக்குள் தலைக்கு எண்ணெய் தேய்க்கலாம்.

மேற்பகுதியில் தேய்க்காமல் முடியின் வேர்க்காலில் எண்ணெய் படும் படி தடவ வேண்டும்.

ஒருசிலர் குளிப்பதற்கு அரைமணி நேரம் முன்பாக எண்ணெய் தேய்ப்பர். தலையில் வறட்சி உள்ளவர்கள் குளித்து ஈரம் காய்ந்த பின்பே எண்ணெய் தடவ வேண்டும்.

தமிழகத்தின் தட்பவெப்பநிலைக்கேற்ப வாரத்தில் இரு நாட்கள் தலைக்கு நல்லெண்ணெய் தேய்த்து 20 நிமிடம் கழித்து சிகைக்காய் தேய்த்து குளிக்கலாம்.

இரவில் படுக்கப் போவதற்கு முன் தலையில் எண்ணெய் வைப்பது தவறு. எண்ணெய் செலவு அதிகமாவதைத் தவிர எந்த பயனும் இல்லை.

தலையில் அதிக எண்ணெய் வைப்பதால் வறட்சி நீங்கி குளிர்ச்சி அதிகரித்து சைனசைட்டிஸ், மூக்கில் நீர் வடிதல், அலர்ஜிக் சைனசைட்டிஸ் பாதிப்பு ஏற்படும்.

பொடுகைப்போக்க வாரம் இருமுறை காலை வேளையில் தலை முதல் பாதம் வரை நல்லெண்ணெய் தடவி குளிக்க வேண்டும் என சித்த மருத்தவர்கள் கூறுகின்றனர்.