மக்காச்சோளம் பிடிக்குமா? அப்போது இது உங்களுக்குத்தான் !

மக்னீசியம், பாஸ்பரஸ், மாங்கனீஸ், துத்தநாகம், வைட்டமின் பி உட்பட பல்வேறு ஊட்டச்சத்துகள் மக்காச்சோளத்தில் நிறைந்துள்ளன.

இதிலுள்ள மக்னீசியம் எலும்புகளை வலுப்படுத்த உதவுகிறது; இதய துடிப்பு மற்றும் ரத்த அழுத்தத்தை இயல்பாக பராமரிக்க உதவுகிறது.

மக்காச்சோளத்திலுள்ள ஃபெருலிக் அமிலம் மற்றும் பிற ஆக்ஸிஜனேற்றங்கள் இருப்பதால், உடலில் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது; மலச்சிக்கலையும் தவிர்க்க உதவுகிறது.

இதிலுள்ள அதிக நார்ச்சத்து வயிற்றை முழுமையாக உணர வைப்பதுடன், பசி உணர்வை குறைக்கிறது. எனவே, ஆரோக்கியமான முறையில் உடல் எடையை குறைக்க உதவும் உணவுகளில் ஒன்றாக உள்ளது.

மக்காச்சோளத்தில் தேவையான அளவு இரும்புச்சத்து உள்ளதால், உடலில் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க உதவுகிறது. எனவே ரத்த சோகையால் ஏற்படும் பாதிப்புகளை தவிர்க்க முக்கிய பங்காற்றுகிறது.

எனவே, வாரம் முறையாவது உங்களின் டயட்டில் மக்காச்சோளத்தை சேர்க்கும்போதும் ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம்.

அதேவேளையில், இதில் அதில் சர்க்கரை மற்றும் கார்போஹைட்ரேட்டுகள் உள்ளதால், நீரிழிவால் பாதிக்கப்பட்டவர்கள் அளவாக உட்கொள்ள வேண்டும்.