சிறுநீரக பாதை தொற்றுக்கான பரிசோதனை, சிகிச்சைகள் என்ன?
சிறுநீரக பாதை தொற்று ஆண்களில் 60 வயது, பெண்களில் 50 வயதை கடந்தவர்களுக்கு அதிகமாக காணப்படுகிறது.
இரவில் 5 முறைக்கும் மேல் சிறுநீர் கழித்தல், சிறுநீரை வெளியேற்றுவதில் எரிச்சல், சிரமப்படுதல், கட்டுப்பாடு இல்லாமல் வருதல் போன்றவை அறிகுறிகளாகும்.
மேலும், சிறுநீருடன் ரத்தம் சேர்ந்து வெளியேறுதல், சிறுநீர் பாதையில் அடைப்பு, ஆண்களுக்கு விந்துப்பை வீக்கம், பெண்களுக்கு நீர்ப்பை அடியிறுக்கம் போன்றவையும் இருக்கக்கூடும்.
இது போன்ற அறிகுறிகள் இருந்தால் சிறுநீர் பரிசோதனை, ஆண்கள் விந்துப்பை வீக்கம் பரிசோதனை, பெண்கள் சிறுநீர்ப்பை, கர்ப்பப்பை பரிசோதனைகள் செய்ய வேண்டும்.
அதில், சிறுநீர் பாதையில் கிருமி தொற்று இருப்பது தெரிந்தால் அதற்கான மருத்துவரை அணுக வேண்டும்.
பெண்கள் சிறுநீர் வெளியேறும் வாய்ப்பகுதியில் தொற்று ஏற்பட்டால் உடனடியாக அதற்கான மருத்துவரை அணுகி பரிசோதனை, சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும்.