வெட்டுக்காயங்களை குணமாக்கும் வெட்டுக்காயப் பூண்டு...!
வெட்டுக்காயப் பூண்டு அல்லது கிணற்றுப்பாசான் என்று அழைக்கப்படும் இந்த மூலிகை தாவரம் சூரியகாந்தி குடும்பத்தைச் சேர்ந்த பூக்கும் தாவரம்.
இது புண்ணாற்றும், குறுதியடக்கி, கபநிவாரணியாகும்.
இந்தச் செடியின் இலைகளை வெட்டுக் காயங்களுக்கு கிராமப்புறங்களில் மருந்தாகப் பயன்படுத்துவர்.
மூச்சுக்குழாய்ச்சிரை, மூக்கடைப்பு, தடுமல், நீர்கோப்பு, வயிற்றுப்போக்கு, பேதி முதலியவை குணமாகும்.
இலையை நீர்விடாது அரைத்து வெட்டுக்காயம், சிராய்ப்பு ஆகியவற்றில் பற்றிடச் சீழ் பிடிக்காமல் விரைந்து ஆறும். தழும்புகளை ஏற்படுத்தாது.
பல ஆண்டுகளாக ஆறாமல் இருக்கும் புண்களை இந்த இலைகளை அரைத்து பற்று போடும் போது விரைவில் ஆற்றும் குணமுடையது.