புருவத்தில் ஸ்டேம்ப் பண்ண தெரிஞ்சா நீங்கதான் கண்ணழகி
முக அழகை வசீகரமாக மாற்றக்கூடியவை அழகான புருவங்கள். இன்றைய பியூட்டி டிரெண்ட், அடர்த்தி மற்றும் தடிமனான புருவங்கள்தான்.
மெல்லிய புருவங்கள் கொண்டவர்கள், செயற்கையாக ஐபுரோ பென்சில் கொண்டு வரைகின்றனர். ஐபுரோ பென், பவுடர், ஜெல் கொண்டும் 'பில்' செய்கின்றனர்.
அந்த வகையில், புருவ வடிவங்களை, 'ஷேப்' செய்து நிரப்பும் செயல்முறையை எளிதாக்க வடிவமைக்கப்பட்ட ஒரு பியூட்டி டூல், 'ஐபுரோ ஸ்டேம்ப்' ஆகும்.
இது, ஒரு ஸ்பாஞ்ச் ஸ்டேம்ப் மற்றும் பல்வேறு புருவ வடிவங்கள் மற்றும் அளவுகளைக் கொண்ட ஸ்டென்சில்களின் தொகுப்புடன் வருகிறது. உடன், இரண்டு பிரஷ்களும் இருக்கும்.
என்ன செய்வது இயற்கையான புருவக் கோட்டுடன் ஒத்து இருப்பது போல, விரும்பிய வடிவத்தை கொண்ட ஸ்டென்சிலை, புருவத்தின் மீது வைக்கவும்.
புருவப் பொடியால் நிறைந்துள்ள ஸ்பாஞ்ச் அப்ளிகேட்டரை கொண்டு அழுத்தவும். ஸ்மூத்தாக இருக்கும் இந்த பவுடர், எளிதாக தோலுடன் சேர்வதால், இயற்கையான ஐபுரோஸ் போலவே இருக்கும்.
வடிவத்தை மேலும் செம்மைப்படுத்த பிரஷ் பயன்படுத்தலாம்.சமச்சீரான, அடர்த்தியான புருவங்களை சில நொடிகளில் செய்ய முடியும்.
கருப்பு, பிரவுன், லைட் பிரவுன் என புருவ முடிகளின்நிறத்திற்கேற்ப தேர்ந்தெடுக்கலாம். ஐபுரோ பென்சில் போன்றவற்றை விடவும், அடர்த்தியான புருவங்களாக எளிதில் அழகுபடுத்தலாம்.
நாள் முழுவதும் மங்காமல் இருக்கும். வாட்டர் புரூப் என்பதால் தண்ணீராலும் அழிந்து போகாது.
மெல்லிய புருவங்கள் உள்ளவர்கள், புருவங்களின் இயற்கையான வடிவத்தை மேலும் மேம்படுத்த நினைப்பவர்கள், முயற்சி செய்து பார்க்கலாம்!