மது அருந்தினால் உண்டாகும் மூளை, மனநிலை பாதிப்பை சரி செய்யலாமா?

பல ஆண்டுகளாக அதிகளவில் மது அருந்துபவர்களுக்கு மூளையிலுள்ள பகுதி சுருங்கத் தொடங்கும்.

இதனால் ஞாபக மறதி, உடல் தள்ளாட்டம், அறிவுத் திறன் குறைபாடு, தசை பலவீனம், தன்னிலை இழப்பு, மாய எண்ணங்கள் தோன்றும்.

மன பதட்டம், மன அழுத்தம், தற்கொலை எண்ணங்களும் தோன்றக்கூடும்.

இவ்வாறு தோன்றும் போது தீவிர மற்றும் நிரந்தர மனநோயாக மாற வாய்ப்புள்ளது.

எனவே, நீண்டநாட்களாக இந்த அறிகுறிகள் இருந்தால், டாக்டரின் ஆலோசனைப்படி மதுவை நிறுத்த வேண்டும்.

மனநல மருத்துவரின் ஆலோசனையை பெறலாம். சிகிச்சையின் போது தனிமையில் இருப்பதையும் தவிர்க்க வேண்டும்.