முகம் பளபளன்னு ஆகணும்னு ஆசையா?

முகம் பளபளக்க வேண்டும் என விரும்புவது, இயல்பான ஒன்றுதான். ஆனால் தவறான கிரீம்களே, சருமத்துக்கு பல பிரச்னைகளை அழைத்து வந்து விடுகிறது'

கேள்விப்படும் கிரீம்களை எல்லாம், வாங்கி பயன்படுத்துவது தான் அந்த தவறு. குறிப்பாக, டாக்டரிடம் ஆலோசிக்காமல் புதிது புதிதாக முயற்சி செய்யக்கூடாது.

ஒரு நாள் முழுக்க வீட்டிலேயே இருந்தாலும், 2-3 முறை முகம் கழுவ வேண்டும். வெளியில் சென்று வரும் போது, முதலில் செய்ய வேண்டியதும் இதுவே.

தேவையற்ற கிரீம் பயன்படுத்துவதை தவிர்த்து விட்டு, ஜென்டிலான கிளன்சர் பயன்படுத்தலாம்.

சன்ஸ்கீரீன், மாய்ஸ்ச்சுரைசர் சருமத்திற்கு நல்லது தான். காலை, மாலை என இரண்டு வேளையும் பயன்படுத்த வேண்டும்.

இதனால் பல சருமம் சார்ந்த பிரச்னைகள் வராது. இந்த கிரீம்களையும் கூட நம் சருமத்திற்கு ஏற்ப, வாங்கி பயன்படுத்த வேண்டும்.

ஆன்லைன் பார்த்து, ஸ்டீராய்டு உள்ள கிரீம்களை வாங்கி பயன்படுத்துவதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.

தண்ணீர் பருகுவது, பழங்கள், காய்கறி அதிகம் உணவில் எடுத்துக்கொள்வது, சர்க்கரை சார்ந்த உணவு பொருட்களை முடிந்த அளவு தவிர்ப்பது அவசியம்.