ஆழந்த உறக்கத்துக்கு இரவில் ஸ்மார்ட்போன் பயன்பாட்டை தவிர்க்கலாம்!

சரியான நேரத்தில் மக்கள் துாங்குகின்றனரா என்பது குறித்த ஆய்வு, நாடு முழுதும் 10 மெட்ரோ நகரங்களில் நடத்தப்பட்டது.

இதில், 63 சதவீதம் பேர் படுக்கையில் படுத்தபடி மொபைல் போனில் வீடியோ பார்க்கின்றனர். 59 சதவீதம் பேர் மொபைல் போனில் உறவினர்கள், நண்பர்களுடன் பேசுகின்றனர்.

இசை கேட்பது, செய்திகள் பார்ப்பது என்று 58 சதவீதம் பேரும், சமூக வலைதளங்களில் வரும் 'ஷார்ட்ஸ்' பார்ப்பது, 'ஆப்'களை உபயோகிப்பது என்று 57 சதவீதம் பேரும் நேரத்தைப் போக்குகின்றனர்.

இதனால், 53 சதவீதம் பேருக்கு துாக்கம் தொடர்பான பல உடல் பிரச்னைகள் உள்ளன.

விடுமுறை நாளாக இருந்தாலும், குறிப்பிட்ட நேரத்தில் உறங்கச் செல்வது, குறிப்பிட்ட நேரத்தில் விழிப்பதை பழக்கமாக்க வேண்டும்.

துாக்கத்திற்கு முதல் எதிரி மொபைல் போன் என்பதை புரிந்து, துாங்குவதற்கு இரண்டு மணி நேரம் முன்னரே மொபைல் பார்ப்பதை தவிர்த்தால், ஆழ்ந்த உறக்கம் வரும்.

படுக்கையறையில், மங்கலான வெளிச்சம் தரும் மஞ்சள் நிற ஆம்பர் விளக்குகளை, மாலை 7:00 மணிக்கு மேல் பயன்படுத்தலாம். இது, இரவு நெருங்கிவிட்டது; துாங்க வேண்டும் என்ற சமிக்ஞையை மூளைக்கு தரும்.