முதுகு தண்டுவடத்தில் தொடர் வலி இருந்தால் என்ன செய்யலாம்?
முதுகு தண்டுவடத்தில் தொடர் வலி பிரச்னைக்கு ஆன்கிலோசிங் ஸ்பாண்டிலைட்டிஸ் சிகிச்சையில், மரபணு ரீதியாக வடிவமைக்கப் பட்ட பயோலாஜிக்ஸ் என்ற புரதங்கள் சிறந்த நிவாரணியாக உள்ளது.
இவை ஆட்டோ இம்யூன் கோளாறால் ஏற்படும் பாதிப்புகளை தடுக்கிறது.
சிகிச்சையுடன் சேர்த்து, உடற்பயிற்சி, வாழ்க்கை முறை மாற்றங்களுடன் பிசியோதெரபி முக்கிய பங்கு வகிக்கிறது.
வழக்கமான ஸ்ட்ரெச்சிங், தசை வலுப்படுத்தும் பயிற்சிகள், சுவாசப் பயிற்சிகள் வலி மற்றும் மூட்டுகள், முதுகெலும்பின் நெகிழ்வுத்தன்மையை மேம்படுத்தும் நீச்சல், நீர் சிகிச்சை பயனுள்ளவை.
நிற்கும்போது, வேலை செய்யும்போது, துாங்கும்போது உடல் சரியான 'பொசிஷனில்' இருப்பதை உறுதி செய்வது முக்கியம்.
தலையணைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்த்து, மல்லாக்க, குப்புறப் படுத்து உறங்க வேண்டும்.
கொழகொழப்பாக இல்லாமல், உறுதியான மெத்தையில் படுப்பது, முதுகெலும்பு வளைவதைத் தடுத்து தேவையான ஆதரவைத் தரும்.
இதற்கு என்று பிரத்யேக உணவு முறை எதுவும் இல்லை, உடல் எடையை சரியான அளவில் பராமரிக்க, சமச்சீரான உணவை உட்கொள்ள வேண்டும்.