ரத்த தானம் செய்வதன் மூலம் ஏற்படும் நன்மைகள் அறிவோமா!
ஒருவர் தானம் செய்யும் ஒரு, 'யூனிட்' ரத்தத்திலிருந்து, பிரிக்கப்படும் சிவப்பு அணுக்கள், தட்டணுக்கள், பிளாஸ்மா மூலம், 3 உயிர்களை காப்பாற்ற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
ரத்த தானம் செய்வது, பெறுபவருக்கு மட்டுமல்ல, கொடுப்பவருக்கும் பல ஆரோக்கிய நன்மைகளைத் தருகிறது.
புதிய செல்கள் உருவாக்கம்: தானம் செய்த, 48 மணி நேரத்திற்குள் உடல் புதிய ரத்த அணுக்களை உற்பத்தி செய்யத் தொடங்கும். இது, உடலை இன்னும் சுறுசுறுப்பாக்கும்.
இதய ஆரோக்கியம்: உடலில் இரும்பு சத்தின் அளவைச் சமநிலைப்படுத்துவதன் மூலம் இதய நோய்கள் மற்றும் மாரடைப்பு ஏற்படும் அபாயத்தைக் குறைக்கிறது.
தொடர்ந்து ரத்த தானம் செய்பவர்களுக்கு உடலில் தேவையற்ற கொழுப்பு குறைந்து, புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பு கணிசமாகக் குறைவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
ரத்த தானம் செய்யும்போது, ரத்த அழுத்தம் மற்றும் ஹீமோகுளோபின் அளவுகள் இலவசமாகப் பரிசோதிக்கப்படுகின்றன.
அத்து டன் எச்.ஐ.வி., ஹெபடைடிஸ் பி மற்றும் சி போன்ற தொற்று நோய்களுக்கான பரிசோதனைகளும் மேற்கொள்ளப்படுவதால், நம் ஆரோக்கிய நிலை குறித்து உறுதி செய்துகொள்ள முடிகிறது.