நுரையீரலை பலமாக்கும் பழங்கள்
பொதுவாக பழங்கள் சாப்பிடுவது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதால் உடல்நலத்துக்கு நல்லது.
இந்நிலையில் பழங்கள் அதிகம் எடுத்துக்கொண்டால் நுரையீரல் செயல்பாடு அதிகரிக்க உதவும்.
குறிப்பாக காற்றுமாசு அதிகமுள்ள இடங்களில் வசிப்பவர்களுக்கு இது சிறந்த பலனை தரும் என பிரிட்டனின் லீசெஸ்டர் பல்கலை ஆய்வு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக, 2 லட்சம் பேரிடம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
அவர்களின் உணவு முறை, வசிக்கும் இடங்களில் உள்ள காற்றுமாசு உள்ளிட்டவை குறித்து ஆய்வு நடத்தப்பட்டது.
இதில், பழங்கள் அதிகம் எடுப்பதால், நுரையீரல் செயல்பாடு அதிகரிப்பதை விஞ்ஞானிகள் கண்டறிந்தனர்.
பழங்களில் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள், வைட்டமின்கள் மற்றும் அழற்சி எதிர்ப்பு ஊட்டச்சத்துக்கள் போன்றவை நிறைந்துள்ளன.
அவை நுரையீரலில் மாசுபட்ட காற்றினால் உண்டாகும் எரிச்சல் மற்றும் சேதத்தை எதிர்த்துப் போராட உதவுகின்றன.