தினமும் சீரகத்தண்ணீர் குடிப்பதால்...

அனைவரின் கிச்சனிலும் தவறாமல் இடம்பெற்றிருக்கும் முக்கியமான பொருட்களில் ஒன்று சீரகம். சமையலுக்கு மட்டுமின்றி ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் இதை பயன்படுத்தலாம்.

முதல்நாள் இரவில் சிறிதளவு சீரகத்தை தண்ணீரில் ஊறவைத்து காலையில் குடிப்பதால் உண்டாகும் நன்மைகளைப் பார்க்கலாம்.

சீரகத்தில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உடல் எடையை குறைப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. உடல் வளர்சிதை மாற்றத்தை துரிதப்படுத்தி, கொழுப்பை கரைக்கிறது.

உடலை நீரேற்றம் செய்யவும் இது உதவுகிறது. உடலிலுள்ள நச்சுகளை நீக்கி சுத்தப்படுத்துவதுடன், நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கிறது.

சீரகத் தண்ணீரை தொடர்ந்து குடிப்பது ஆரோக்கியமான செரிமான அமைப்புக்கு வழி வகுக்கிறது. அஜீரணம், வயிற்றுப்போக்கு, குமட்டல் போன்ற செரிமானப் பிரச்னைகளைத் தடுக்கிறது.

இன்சுலின் உற்பத்தியை அதிகரிப்பதால், ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்கிறது. இதனால் டைப் 2 நீரிழிவு பிரச்னையை கட்டுப்படுத்த உதவுகிறது.

இரும்புச்சத்து நிறைந்திருப்பதால், ரத்தத்தில் ஹீமோகுளோபினை அதிகரித்து, ரத்தச்சோகை பாதிப்பை குறைக்கிறது.

ஆரோக்கியம் மட்டுமின்றி சரும அழகுக்கும் கைக்கொடுக்கிறது இந்த சீரகத்தண்ணீர். இதிலுள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நச்சுக்களை வெளியேற்றுவதால் ஆரோக்கியமான, பளபளப்பான சருமத்துக்கு வழிவகுக்கிறது.

கூந்தல் பலத்தை அதிகரிப்பதுடன் உதிர்வு, இளநரை போன்ற பல பிரச்னைகளையும் தவிர்க்கிறது.