வளரும் குழந்தைகளின் எலும்புகளை வழுப்படுத்த என்ன செய்யலாம்?

முந்தைய தலைமுறையினருக்கும், தற்போதைய தலைமுறையினருக்கும் இடையே குழந்தை பருவத்தில் ஏராளமான வேறுபாடு ஏற்பட்டுள்ளது.

குழந்தைகளுக்கு ஸ்மார்ட்போன்களை காட்டி வளர்ப்பதால், விளையாடி வளர வேண்டிய வயதில் ஒரே இடத்தில் உட்காருகின்றனர்.

இதனால் உணவுகளை தவிர்ப்பதற்கான வாய்ப்பு ஏற்படுகிறது.

அப்படியே உண்டாலும், ஆரோக்கியமானவற்றை தவிர்த்து, பதப்படுத்தப்பட்ட உணவுகளின் மீதுதான் ஆர்வம் செல்கிறது.

சிறுவயதில் இருந்தே பால், முட்டை, கீரை உணவுகளை அதிகளவில் தரும்போது, குழந்தைகளின் எலும்புகள் ஆரோக்கியமான வளர்ச்சியில் இருக்கக்கூடும்.

தினமும் குறைந்தப்பட்சமாக குழந்தைகள் ஒரு மணி நேரமாவது நன்றாக ஓடி, ஆடி விளையாட வேண்டும்.