பித்தப்பை கல்லை எப்படி சரி செய்வது?

பித்தப்பை கற்கள் என்பது ரத்தத்திலுள்ள கொழுப்பு மற்றும் பிற ரசாயனங்களின் சமநிலையின்மையினால் உருவாகும் கடினமான துகள்.

ரத்த குறைபாடு உள்ளவர்களுக்கு இந்த நோய் பாதிப்பு வரும்.

கல் உருவானால் ஆரம்பத்தில் எந்த அறிகுறியும் இருக்காது. கல் பெரிதாக பெரிதாக வயிற்றின் மேல் வலது பக்கத்தில் வலி இருக்கும்.

உணவு உட்கொண்ட உடன் வலி ஏற்படலாம். மஞ்சள் காமாலை, அஜீரணம் இவற்றின் அறிகுறி.

குறைந்த கொழுப்புள்ள உணவுகளை சேர்த்துக் கொள்ள வேண்டும்.

சரியான உடல் பருமனை பராமரிக்க வேண்டும். தினமும் உடற்பயிற்சி செய்ய வேண்டும்.

பித்தப்பை கற்களை எம்.ஆர்.ஐ., ஸ்கேன், சிடி ஸ்கேன் மூலம் அறியலாம். லேப்ரோஸ்கோபிக் சிகிச்சை மூலம் எளிதில் இதை அகற்ற முடியும்.