குளிர்காலத்திற்கு ஏற்ற சரும பராமரிப்புகள் சில...
குளிர்காலத்தில் மாய்ச்சரைசர்கள் மற்றும் கிரீம்கள் தடவ வேண்டியது அவசியம்.
குளிக்கப்பயன்படுத்தும் தண்ணீரில் சில துளிகள் எண்ணெய் சேர்த்துக் கொள்ளுங்கள். இது, குளிப்பதால், ஏற்படும் ஈரப்பதம் இழப்பு மீண்டும் பெற உதவும்.
மிகவும் சூடான நீரில் குளிப்பதை தவிர்க்க வேண்டும். ஏனென்றால், சூடான நீரில் குளிப்பதால், உடலின் இயற்கையான எண்ணெய்ப் பசை குறைந்துவிடும்.
சோப், உடல் வறட்சியை அதிகப் படுத்தும் என்பதால் சோப்பு போட்டு குளிர்ப்பதை தவிர்க்கவும். கடலை மாவு, பாசிப்பயறு மாவு போன்றவற்றை பயன்படுத்தலாம்.
சோப்பு உபயோகித்தே ஆக வேண்டும் என்ற நிலை உள்ளவர்கள், கிளிசரின் சோப்பை பயன்படுத்தலாம்.
உடலில் தேங்காய் எண்ணெய் தேய்த்து, குளிப்பது நல்லது. இதன் மூலம், உடல் வறட்சி மற்றும் வெடிப்பு ஏற்படுவதை தடுக்கலாம்.
தோல் வறண்டு இருந்தால், பால் ஏட்டை அடிக்கடி பூசி, உலர வைத்து, பின் குளித்தால், சருமம் மென்மையாகி, தோல் வறட்சி போய் விடும்.
இரவு தூங்கச் செல்வதற்கு முன், உப்பு கலந்த நீரில், பாதங்களை, 10 நிமிடம் வைத்த பின், 'பெட்ரோலியம் ஜெல்லி' தேய்த்து வந்தால், வெடிப்பு குறையும்.
தூங்கும் முன், பன்னீர் மற்றும் கிளிசரின் கலந்த கலவையை கால் பாதங்களிலும், கை விரல்களிலும் தேய்த்துக் கொண்டால், சருமம் மிருதுவாகி, அழகு பெறும்.