ஆழ்ந்த உறக்கத்தை பெற அருமையான டிப்ஸ்
தினமும் குறிப்பிட்ட நேரத்திற்குள் உறங்கச் செல்வதன் மூலம் உயிரியல் கடிகாரம் சரியான முறையில் வேலை செய்ய ஆரம்பித்து, ஆழ்ந்த உறக்கத்தைப் பெற்று, உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம்.
உறங்கச் செல்வதற்கு முன் குறைந்தது ஒரு மணி நேரமாவது ஸ்மார்ட்போன்கள் அல்லது லேப்டாப்களைப் பயன்படுத்தாமல் இருப்பது நல்லது.
உங்கள் படுக்கையறையைக் குளிர்ச்சியாகவும், இருட்டாகவும், அமைதியாகவும் வைத்திருங்கள்.இது நிம்மதியான உறக்கத்தை ஊக்குவிக்கும்.
உறங்கச் செல்வதற்கு முன்பு மதுபானம், புகைப்பிடித்தல் ஆகியவற்றைத் தவிர்ப்பது நல்லது. இவைகள் உறக்கத்தை குறுக்கிடுவதோடு, உறங்குவதைக் கடினமாக்கும்.
தினமும் செய்யும் வழக்கமான உடற்பயிற்சிகள் விரைவாகத் உறங்குவதற்கும், உங்கள் உறக்கத்தின் தரத்தை மேம்படுத்துவதற்கும் உதவும். இருப்பினும், படுக்கைக்கு முன் தீவிரமான உடற்பயிற்சியைத் தவிர்க்கவும், அது உறங்குவதைக் கடினமாக்கும்.
மன அழுத்தம் மற்றும் பதட்டம் உறக்கத்தைக் குறைக்கலாம். ஆழ்ந்த சுவாசம், தியானம் அல்லது யோகா போன்றவற்றைப் பழக்கமாக்கிக் கொண்டால் நிம்மதியான உறக்கத்திற்கு வழிவகை செய்யும்.