ஈஸ்னோபீலியா என்றால் என்ன? காரணங்கள் அறிவோம்...

சுவாசப் பாதையில் ஏற்படும் ஆஸ்துமா, அலர்ஜி, பிராங்கிடிஸ், கொசுவால் வரும் யானைக்கால் நோய் உட்பட பல கோளாறுகளை குறிக்கும் பொதுவான பெயர் 'ஈஸ்னோபீலியா!'

ரத்த வெள்ளை அணுக்களின் ஒரு வகையான 'ஈஸ்னோபில்'கள் தீவிர நோய் தொற்றின் போது, 1 மைக்ரோ லிட்டர் ரத்தத்தில் 500க்கும் அதிகமாக இருக்கும்.

ஈஸ்னோபீலியா இருப்பவர்களுக்கு குளிர் காலத்தில் 'வைரஸ் கிருமி சுவாச மண்டலத்தை துாண்டிவிடும். இதன் தாக்கத்தால் தொடர்ந்து ஓரிரு மாதங்கள் வரை இருமல் இருக்கலாம்.

இரவில், அதிகாலை நேரத்தில் இருமல் அதிகமாகலாம். சிலருக்கு நாள் முழுதும் இருக்கும்.

அவரவருக்கு எத்தகைய உணவுகள் அலர்ஜியை அதிகப்படுத்துகின்றன என்பதை அறிந்து அவற்றை தவிர்க்க வேண்டும். எண்ணெய் தேய்த்து குளிப்பதை தவிர்ப்பது முக்கியம்.

புளூ தடுப்பூசி போட்டுக் கொள்வது ஓரளவுக்கு பாதுகாப்பு தரும் என டாக்டர்கள் கூறுகின்றனர்.

பல நோய்களை போன்று இதுவும் மரபியல் காரணிகளால் வரக்கூடியது. ஆரோக்கியமான வாழ்க்கை முறையால் ஈஸ்னோபீலியா வராமல் தவிர்க்க முடியும் என கூறப்படுகிறது.