தேர்வு நெருங்கியாச்சு!! நினைவாற்றலை அதிகரிக்கும் உணவுகள் லிஸ்ட் இதோ!
தேர்வு நேரம் நெருங்கி விட்டதால், குழந்தைகள் அதிகமாக லேப்டாப், டேப் என்று தகவல்களை தேடுவதிலும், பாடப் புத்தகங்களை படிப்பதிலும் முனைப்பாக இருப்பர்.
இந்த சமயத்தில், மூளையின் செயல்பாட்டை அதிகப்படுத்தி, நினைவாற்றல், கவனச்சிதறல் இல்லாமல், முழு மனதுடன் கற்கும் திறனை அதிகரிக்க சில டிப்ஸ் இதோ...
சூரியகாந்தி விதைகளை பிரைன் டானிக் என்றே சொல்லலாம். தினமும் 10 விதைகளை அப்படியே சாப்பிடலாம். வறுத்து பொடித்து, பழச்சாறு, காய்கறி சாலட்டில் கலந்தும் தரலாம்.
இதில் உள்ள ஆன்டி ஆக்சிடென்ட், செல்களை புதுப்பித்து தரும். ரத்த ஒட்டத்தை அதிகரிக்கும். ஒமேகா 3 பேட்டி ஆசிட்ஆரோக்கியத்திற்கு நல்லது.
பிரக்கோலி, காலிபிளவர், முட்டைக் கோஸ் தினமும் ஏதாவது ஒன்றை சமைத்து சாப்பிடலாம். பிஞ்சாக இருந்தால் பச்சையாகவும் சாப்பிடலாம். மூளை செயல் திறன் மற்றும் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க உதவும்.
தக்காளியில் லைக்கோபின் என்ற ஆன்டி ஆக்சிடென்ட் உள்ளது. இதில் உள்ள காமா அமினோ பியூட்ரிக் அமிலம், ரத்த ஓட்டத்தை அதிகரித்து, சுறுசுறுப்பாக வைக்கும்.
வால்நட் என்கிற அக்ரூட்டை தினமும் இரண்டு சாப்பிடலாம். இதில் உள்ள பிளேவினாய்டு, செலீனியம், குரோமியம், மெக்னீசியம் என்று பல நுண்ணுாட்டச் சத்துக்களின் கலவை இது.
அடிக்கடி வல்லாரைக் கீரையை கொடுப்பது அவர்களின் மூளை செயல்பாட்டை அதிகரிக்கும். மேலும் அவர்கள் மன வலிமையுடன் செயல்படுவார்கள்.