அதிக நேரம் வேலையா...? மூளை செயல் திறன் பாதிக்கும் அபாயம்

நீண்ட நேரம் பணியாற்றுவோருக்கு மூளை செயல் திறன் பாதிக்கும் வாய்ப்புள்ளது.

இது அவர்களது உணர்ச்சி கட்டுப்பாடு, ஞாபகசக்தி மற்றும் முடிவெடுக்கும் திறமையை பாதிக்குமென தென் கொரிய ஆய்வு தெரிவித்துள்ளது.

வாரத்துக்கு 52 மணி நேரத்துக்கு மேல் வேலை செய்யும் மற்றும் சரியான நேரம் பணியாற்றும் நபர்களிடம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

மூளை செயல்பாடு எம்.ஆர்.ஐ., ஸ்கேன் மூலம் இதில் ஆய்வு நடத்தப்பட்டது.

அதிக நேரம் பணியாற்றுபவர்களுக்கு மூளையில் பாதிப்பு ஏற்படுவது கண்டறியப்பட்டது.

இதை தவிர்க்க போதுமான ஓய்வு, துாக்கம் மற்றும் உடற்பயிற்சி அவசியம் என வலியுறுத்தப்பட்டுள்ளது.