தொப்பையை குறைக்கும் பிளாங்க் பயிற்சி… பலன்கள் பல…

நம் உடலையே கருவியாக மாற்றி வீட்டிலேயே செய்யக் கூடிய மிக எளிய உடற்பயிற்சி பிளாங்க் (Plank).

மேலும் தொப்பை கொழுப்பைக் விரைவாக குறைக்க பயன்படும் உடற்பயிற்சியும் பிளாங்க் தான். அதனால் எந்த உடற்பயிற்சிகள் செய்தாலும் இறுதியில் இதை செய்யலாம்.

தினமும் பிளாங்க் செய்வதால் முதுகு, தோள்பட்டை மற்றும் வயிற்றுத் தசைகள் வலுப்பெறும்.

உங்கள் முகத்தை கீழே வைத்து, கைகளை மடக்கி முன்பக்கமாக வைக்க வேண்டும். உங்கள் கால்களை ஒன்றாக வைத்து, நீளமாக நீட்டி இருக்கவும்.

தேவைப்பட்டால் முழு உடலும் உள்ளங்கை, கால் விரல்களில் தாங்கியடி இருக்கலாம். இதுவும் ஒரு வகை பிளாங்க் தான்.

உங்கள் உடல், கழுத்து, தலை மற்றும் கால்கள் ஒரு நேர் கோட்டில் இருக்க வேண்டும். பின்னம் பகுதியும் அதே கோட்டில் இருக்கவும்.

30-60 வினாடி இடைவெளி எடுத்து, பிளாங்கை குறைந்தது ஒரு நாளைக்கு மூன்று முறை செய்யவும்.

எவ்வளவு நேரம் பிளாங்க் நிலையில் இருக்கிறோமோ அந்த அளவுக்கு நம்முடைய உடல், வயிறு உறுதியாகும். தேவைப்பட்டால் இடைவெளி எடுத்து அதிக முறை செய்யலாம்.

பிளாங்க் உடலின் வளர்சிதை மாற்றப்பணிகளை விரைவுபடுத்தப்படும். மூட்டு, முதுகு வலி ஏற்படுவதற்கான வாய்ப்பை குறைக்கும்.