வயதானவர்களுக்கு இரவு, அதிகாலையில் வரும் தொடர் இருமலுக்கு காரணமென்ன?

வயதானவர்களுக்கு வைரஸ், பாக்டீரியா தொற்றாலும் ஒவ்வாமை, ஆஸ்துமா காரணமாகவும் தொடர் இருமல் ஏற்படும்.

மூச்சுக்குழாய் அழற்சி, நிமோனியா காரணமாகவும் தொடர் இருமல், சளி தொந்தரவு ஏற்படும்.

பொதுவாக புகைப்பிடிப்பவர்களுக்கு தொடர் சளி, இருமல் ஏற்படக்கூடும்.

செல்லப்பிராணிகளின் முடி, அறையில் படிந்திருக்கும் துாசி, புதிதாக பெயின்ட் அடித்ததன் காரணமாகவும் தொடர் இருமல் ஏற்படலாம்.

எனவே, புகை பிடிப்பதை தவிர்க்க வேண்டும்.

அதிகளவில் தண்ணீர் குடித்தால் இருமல் குறையும்.

8 வாரங்களுக்கு மேல் தொடர் இருமல் இருந்தால் மருத்துவமனைக்குச் சென்று பரிசோதனைகள் செய்து சிகிச்சை பெற வேண்டும்.