வீட்டிலேயே சுய மருந்து எடுப்பது சரியா?

நோய்க்கு உண்மையான காரணம் நமக்குத் தெரியாது. சுய மருந்து உட்கொள்வது தவறான மருந்துகளை எடுத்துக்கொள்ள வழிவகுக்கும்.

இரைப்பை அழற்சி, ஒவ்வாமை, சிறுநீரகம், கல்லீரல் நோய்கள் போன்ற தேவையற்ற பக்க விளைவுகள் ஏற்படக்கூடும்.

அதேபோல் டாக்டரின் ஆலோசனை இல்லாமல் ஆன்டிபயாடிக் போன்ற சுய மருந்துகளை பயன்படுத்துவது பாக்டீரியாவை வலிமையாக்கும்.

வலி நிவாரணி போன்ற மருந்துகளை எடுத்துக்கொள்வது உண்மையான பிரச்னையைக் குணப்படுத்தாமல் அறிகுறிகளை மறைக்கக்கூடும். இது டாக்டரின் சரியான சிகிச்சையை தாமதப்படுத்தும்.

இதனால் சிலர் மருந்துக்கு அடிமையாகி அதை எடுத்துக்கொண்டால் தான் தனக்கு சரியாகும் என்ற எண்ணத்திற்கு வந்து விடுகின்றனர். இது உடல் ரீதியாக பல பக்கவிளைவுகளை உண்டாக்கும்.

எனவே சீரான உடற்பயிற்சி, ஆரோக்கியமான உணவு, டாக்டரின் ஆலோசனை பெற்று மருந்து உட்கொள்ளுதல் நமது உடல் நலத்திற்கு நல்லது.