எல்லோருக்கும் சி.பி.ஆர்., விழிப்புணர்வு அவசியம்...

வீடு, வெளியிடங்களில் திடீரென மயக்கம் அடைபவர்களில் 20 சதவீதம் பேர் சி.பி.ஆர்., சிகிச்சை பெறாமல் வருவதால் உயிரிழக்க நேரிடுகிறது.

மருத்துவமனைக்கு வரும் வரை சி.பி.ஆர்., சிகிச்சை அளித்துக் கொண்டே வந்தால் 80 சதவீதம் பேரை காப்பாற்றி விடலாம் என டாக்டர்கள் கூறுகின்றனர்.

இதற்கு கருவிகள் தேவையில்லை. மருத்துவம் படிக்காத அனைவரும் செய்யலாம். மயக்கத்தின் போது இதயம் செயலிழந்து போவதால் மூளைக்கு ரத்தம் போகாது

பாதிக்கப்பட்டவரின் மார்பு நடுவில் கைகளை வைத்து ஒரு நிமிடத்திற்கு 100 முறை கையால் அழுத்தம் (சி.பி.ஆர்., ) கொடுக்க வேண்டும்.

மார்பை கையால் அழுத்துவதன் மூலம் அவரது இதயத்தில் இருந்து மூளை, சிறுநீரகம், இதயத்திற்கு ரத்தஓட்டம் செல்வதற்கு உதவுகிறோம்.

மூளைக்கு ரத்தம் சென்றால் மருத்துவ சிகிச்சைக்கு பின் மூளை நன்றாக செயல்படும்.

தொடர்ந்து 30 முறை மார்பை அழுத்தி விட்டு இருமுறை வாயால் மூச்சுகாற்றை வேகமாக செலுத்த வேண்டும்.

மூச்சுக்காற்று செலுத்தும் போது அவரது நுரையீரல் வேகமாக விரிவடையும்.