சரும பளபளப்புக்கு உதவும் வெண்டை

மருத்துவக் குணம் கொண்ட காய்களில் முக்கியமானது, வெண்டைக்காய். இதிலுள்ள பாஸ்பரஸ், புத்தி கூர்மையை அதிகரிக்கச் செய்கிறது.

உடலிலுள்ள கெட்ட கொழுப்பை கரைக்கும் 'பெக்டின்' என்ற நார்ப்பொருளும், இதயத்துடிப்பை சீராக்கும் மெக்னீசியமும் இதிலுள்ளது. 100 கிராம் வெண்டையில் கிடைக்கும் கலோரி, 66 ஆகும்.

வெண்டையின் சிறப்பு குணமே கொழகொழப்பு தான். இதிலுள்ள ஒருவித அமிலம், இதை உண்டாக்குகிறது. இதன் காய், இலை, விதை, வேர் ஆகிய அனைத்துமே மருத்துவக்குணங்கள் நிரம்பியவை.

இதிலுள்ள நார்ப்பொருள்களால் மலச்சிக்கலை தவிர்க்கலாம். குடல் சுத்தமாவதுடன், வாய் துர்நாற்றமும் நீங்கும்.

லேக்ஸடிவ் பண்புகள், அல்சரை கட்டுப்படுத்தும்; வாயு கோளாறுகளை தவிர்க்க உதவும்.

வெண்டைக்காயை நன்றாக வேக வைத்து அந்த நீரை கூந்தலில் தடவி வர உதிர்வு பிரச்னை நீங்கும். .

இளம் வெண்டைப் பிஞ்சுடன், சர்க்கரை சேர்த்து, சாறுபோல் தயாரித்து குடிக்க, இருமல், நீர்க்கடுப்பு, எரிச்சல் முதலியவை தணியும்.

சிறுநீர் நன்கு பிரியவும், உடலுக்கு குளிர்ச்சியைத் தரவும், தோல் வறட்சியை நீக்கவும், சருமத்தை பளபளப்பாக மாற்றவும் இது உதவுகிறது.