இன்று உலக மூட்டுவலி தினம்

உலகில் 50 கோடி மூட்டு வலி / முடக்குவாத பிரச்னையால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மூட்டுவலி / முடக்குவாதம் (ஆர்த்ரிடிஸ்) என்பது கால், கை விரல், தோள்பட்டை என உடலில் எந்த மூட்டிலும் ஏற்படக்கூடியது.

இதற்கு உடல்பருமன், முதுமை, அடிபடுதல், மூட்டுச்சவ்வு கிழிதல், கிருமித்தொற்று, காச நோய், யூரிக் அமிலம் மூட்டுகளில் படிவது போன்றவை பொதுவான காரணங்கள்.

இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக அக்.12ல் உலக மூட்டுவலி தினம் கடைபிடிக்கப்படுகிறது.

முதியோர் மட்டுமல்லாமல் இளைஞர்களும் பாதிக்கப்படுகின்றனர். பல்வேறு சிகிச்சை முறைகள் உள்ளன.

தினசரி உடற்பயிற்சி செய்வதன் மூலம், எடையைக் கட்டுக்குள் வைத்தால், எலும்பு வலிமை பெறும்.

குறிப்பாக வலி ஏற்படாமல் இருக்க, ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுகளை சாப்பிட வேண்டும்.