ஆரோக்கியத்திற்கு ஆதாரம் கிராஸ் டிரைனிங்!

ஏதோ ஒரு உடற்பயிற்சியை தினமும் செய்பதை விட, ஒரே நேரத்தில் இரண்டு, மூன்று பயிற்சிகளை இணைத்து செய்தால் தான் பலன் இருக்கும் என்று ஆய்வில் தெரிந்தது.

தசைகளின் வலிமை, இதய ஆரோக்கியம் இரண்டு பயிற்சிகளையும் ஒரே நேரத்தில் செய்வது தான் கிராஸ் டிரைனிங்.

வயலில் நாற்று கட்டுகளை சுமந்து நடப்பதைப் போன்று, 'ஜிம்மில் 'பார்மர்ஸ் வாக்' என்ற ஒரே நேரத்தில் இரு பயிற்சிகளை செய்யும் போது, இதயமும், தசைகளும் வலிமை பெறும்.

கிரிக்கெட், தடகளம் என்று எந்த விளையாட்டாக இருந்தாலும் கிராஸ் டிரைனிங் பயிற்சி கட்டாயம் இருக்கும்.

இப்பயிற்சியை எல்லாரும் செய்யலாம். எவ்வளவு நேரம், எந்த அளவு செய்யலாம் என்பது நபருக்கு நபர் வேறுபடும்.

மாரத்தான் ஓட்டம், டிரக்கிங் செல்பவர்கள், இப்பயிற்சியை ஒரு மாதம் முன்பிருந்தே செய்வது நல்லது.

தினமும் நடைபயிற்சி, யோகா என்று ஏதோ ஒன்றை மட்டுமே இதுவரை செய்தவர்கள், பயிற்சியாளரிடம் சென்று முறையாக பயிற்சி பெற்ற பின், கிராஸ் டிரைனிங் செய்வதே பாதுகாப்பானது.