ஆஸ்துமா பாதிப்பு பரம்பரை வழியாக வருமா? அதற்கு தீர்வு என்ன?

மூச்சுக்குழாய்களில் வீக்கம் ஏற்பட்டு மூச்சுக்காற்று சுலபமாக உள்ளே சென்று வர இயலாத சூழ்நிலையே ஆஸ்துமா. இந்த பாதிப்பு பெரும்பாலும் பரம்பரை ரீதியாக வருவதுண்டு.

ஆஸ்துமா என்பது பெரியவர், சிறியவர்களுக்கு ஏற்படும் நுரையீரல் பாதிப்புதான்.

தொடர்ந்து இருமல், மூச்சுத் திணறல், மார்பு இறுக்கம் அடைதல், நுரையீரல் பகுதியில் இருந்து இருமல் சத்தம் வருதல் இதன் அறிகுறிகள்.

ஆஸ்துமா உள்ளவர்கள் தங்களது உணவு பழக்க வழக்கம், வாழ்க்கை நடைமுறைகளையும் அதற்கு ஏற்ப மாற்றிக் கொள்ள வேண்டும்.

மழைக்காலங்களில் இதன் தாக்கம் கூடுதலாக இருக்கும்.

இளம்சூடான கீரை வகைகள், வெஜ் சூப், ஆட்டுக்கால் சூப் ஓரளவு அலர்ஜியை கட்டுக்குள் வைத்திருக்கும்.

முக்கியமாக ஆஸ்துமா உள்ளவர்கள் வயிறு நிறைய உணவு உண்ணுதல் கூடாது. கூடுதல் உணவு உண்டால் நுரையீரலுக்கு அழுத்தம் கொடுத்து மூச்சு திணறல் வருவதற்கு வாய்ப்பு உண்டு.

ஆஸ்துமா உள்ளவர்கள் இரவு 7 :00 மணிக்குள் உணவு உண்ணுதல் அவசியம்.