நாள்பட்ட அழற்சியை போக்க அருமையான டிப்ஸ்

பழங்கள், காய்கறிகள் மற்றும் பதப்படுத்தப்படாத உணவுப் பொருட்கள் உள்ளிட்ட அழற்சி எதிர்ப்பு உணவைக் கொண்டிருப்பது நாள்பட்ட அழற்சியை எதிர்த்துப் போராட உதவுகிறது.

சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரை, பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் மற்றும் ஆல்கஹால் ஆகியவற்றை எப்போதும் தவிர்க்க வேண்டும்.

சால்மன் மற்றும் மத்தி போன்ற மீன்களில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளன. இவை நாள்பட்ட அழற்சியை எதிர்த்துப் போராடுவதற்கான ஒரு முக்கியமான ஊட்டச்சத்தாகும்.

சுத்திகரிக்கப்பட்ட கார்போஹைட்ரேட்டுகள் ரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கலாம் மற்றும் வீக்கத்தை துரிதப்படுத்தலாம். வெள்ளை ரொட்டி மற்றும் வெள்ளை அரிசி போன்ற சுத்திகரிக்கப்பட்ட கார்போஹைட்ரேட் நிறைந்த உணவுகளை தவிர்க்க வேண்டும்.

நீச்சல், சைக்கிள் ஓட்டுதல் அல்லது விறுவிறுப்பான நடைபயிற்சி போன்ற உடல் செயல்பாடுகளையும் தினசரி வழக்கத்தில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

யோகா, தியானம் மற்றும் ஆழ்ந்த சுவாசம் ஆகியவை மன அழுத்தத்தைக் குறைக்கவும், உடலைத் தளர்த்தவும் உதவுகிறது, இது அழற்சியின் அறிகுறிகளைக் குறைக்கிறது.