இதயத்தை கண்காணிக்கும் தொழில்நுட்பம் குறித்து அறிவோமா…
'புளூடூத்' போன்ற தகவல்தொடர்பு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி, இதயத்தில் பொருத்தப்பட்ட கருவிகளின் செயல்பாட்டை எந்த இடத்தில் இருந்தும் டாக்டரால் கண்காணிக்க முடியும்.
சீரற்ற இதய செயல்பாட்டை சரி செய்ய பொருத்தப்படும் பேஸ்மேக்கர்ஸ், இம்பிளாண்டபுள் கார்டியோவர்ட்டர் - டிபிப்ரிலேட்டர்கள், சி.ஆர்.டி.டி., போன்ற கருவிகளை இதன் வயிலாக இருந்த இடத்தில் இருந்தே மருத்துவர் கண்காணிக்கலாம்.
இதன் முக்கிய அம்சங்கள் குறித்து அறிந்துக்கொள்ளலாம்…
எந்த நேரத்திலும் மருத்துவரை நேரடியாக அணுகுவதற்கான சாத்தியம்
தகவல்களை மருத்துவரிடம் பாதுகாப்பாக தெரிவிக்கும் வசதி
இதயத்துடிப்பில் ஏற்படும் மாறுபாடுகளை உடனடியாக எங்கிருந்தும் டாக்டரிடம் சொல்லும் வசதி
சீரற்ற இதயத்துடிப்பு, இதய செயலிழப்பினால் வரும் பக்க விளைவுகளை தவிர்க்கலாம்