குழந்தைகளின் பால் பற்களை பராமரிக்க டிப்ஸ்….
பால் பற்களை பராமரிக்கத் தேவையில்லை என்ற பொதுவான அபிப்ராயம் உள்ளது. பால் பற்களில் சொத்தை விழுந்தால், பல்லின் வெளிப்புறத்தில் இருக்கும் எனாமல் உடையும்.
பால், சாப்பாடு ஊட்டிய பின் பஞ்சு, சுத்தமான வலை துணியை வைத்து துடைக்க
வேண்டும். அதில் வெள்ளையாக படிமம் படிந்தால், சொத்தை ஆரம்பித்து விட்டது
என்று தெரிந்து கொள்ளலாம்.
குழந்தைகளுக்கென்றே இருக்கும் பிரத்யேக பிரஷ், புளூரைடு இருக்கும் பேஸ்ட் தான் பயன்படுத்த வேண்டும். பற்பசையில் உள்ள புளூரைடு, சொத்தை வராமல் தடுக்கும்.
வாயில் வைத்ததை விழுங்க வேண்டுமா, துப்ப வேண்டுமா என்ற கட்டுப்பாடு 3 வயதில் தான் வரும். அதனால், ஒரு அரிசி அளவு பேஸ்ட் வைத்தால் போதும்.
பொதுவாக 6 - 7 வயது தான், குழந்தை தானாகவே பிரஷ் செய்யும் வயது. காலையில் எழுந்ததும் பிரஷ் செய்வதை விடவும், இரவில் துாங்குவதற்கு முன் பிரஷ் செய்வது மிகவும் முக்கியம்.
பல் துலக்கும் போது, பொதுவாக நாம் செய்வது போல பக்கவாட்டில் பிரஷ் செய்வது தவறு. கண்டிப்பாக மேலும், கீழும் துலக்க வேண்டும்.