நோய் எதிர்ப்பு சக்தியை தரும் உணவுகள் சில
பூண்டு... நுண்ணுயிரிகளை அழித்தல், உயர் ரத்த அழுத்தத்தை குறைத்தல், நுரையீரல் தொற்று, கேன்சருக்கு எதிராக போராடும் தன்மை இதிலுள்ள அலிசின் என்ற பண்புக்குள்ளது.
தினமும் குறைந்தது, 3 பல் பூண்டாவது சமையலில் சேர்த்துக் கொள்ள வேண்டும். தொற்று அதிகம் பரவும் காலங்களில், பூண்டு சாப்பிடுவதைத் தவிர்க்கவே கூடாது.
ஆக்சிஜன் குறைவதால் செல்களில் ஏற்படும் சிதைவை சரி செய்யும் திறன், கீரையிலுள்ள கூட்டு வேதிப்பொருளான, 'பைட்டோ கெமிக்கலில்' இருக்கிறது.
உடல் உள்ளுறுப்பில் ஏற்படும் சிதைவு, வீக்கத்தை தடுப்பதுடன், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, நுரையீரலை ஆரோக்கியமாக வைத்திருக்கும்.
ஆப்பிள்... கீரையை போன்றே இதிலும் பைட்டோ கெமிக்கல் உள்ளது. தினமும் ஒரு ஆப்பிளை சாப்பிட்டால், ஆஸ்துமா பாதிப்பு நீங்கும். நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
இதயம், நுரையீரல் தொடர்பான பிரச்னைகளை தவிர்க்க உதவுகிறது.
மீன் அல்லது மீன் எண்ணெயை தினமும் உணவில் சேர்ப்பதால், அதிலுள்ள ஒமேகா - 3 உட்பட பல நுண்ணுாட்டச் சத்துக்கள், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.
இஞ்சி... இதில் இயற்கையாகவுள்ள ஜிஞ்கரோல் என்ற வேதிப்பொருள் ஆஸ்துமா, மைக்ரேன் தலைவலி, சளி, உயர் ரத்த அழுத்தம், ஆகியவற்றை சரி செய்யும்.
ஒரு இன்ச் அளவு இஞ்சியை தோல் சீவி, லேசாக இடித்த, வெதுவெதுப்பான தண்ணீரில் கலந்து, தினமும் காலையில் குடிப்பது நல்ல பலனைத் தரும்.