ஆரோக்கியமாக வாழ எந்த நேரத்தில் என்ன செய்யலாம்...

காலை 3:00 -- 5:00 மணி: வான் வெளியில், சுத்தமான காற்று அதிகமாக இருக்கும். இந்த நேரத்தில் மூச்சு பயிற்சி, தியானம் செய்தால், நுரையீரல் பலம் பெறும்.

காலை 5:00 - 7:00 மணி: இந்த நேரத்தில், மலம் கழிக்க உடலை பழக்கப்படுத்தினால், பெருங்குடல் சுத்தமாகி, எந்த நோயும் வராது.

காலை 7:00 - 9:00 மணி: காலை உணவை 9:00 மணிக்குள் சாப்பிட்டு விட வேண்டும். நேரம் கடந்து சாப்பிடும் போது, மற்ற உறுப்புகளின் இயக்கமும் சேர்ந்து, சுழற்சி தடைபடும்.

காலை 9:00 - 11:00 மணி: காலையில் உண்ட உணவை மண்ணீரல் செரித்து ஊட்டச்சத்தாக மாற்றும் நேரம். இந்த நேரத்தில் அதிகமான உடல் உழைப்பு, திரவ உணவுகள் உட்கொள்வதை தவிர்க்க வேண்டும்.

காலை 11:00 - 1:00 மணி: இது இதயத்தின் நேரம். இந்த நேரத்தில் படபடப்பு, கோபப்படுதல் கூடாது. கடினமான வேலை எதுவும் செய்யாமல் தண்ணீர் மட்டும் குடிக்கலாம்.

மதியம் 1:00 - 3:00 மணி: சிறுகுடல் நேரத்தில் மதிய உணவு சாப்பிட்டு, சிறிது நேரம் ஓய்வெடுத்துக் கொள்ளலாம்.

மாலை 3:00 - 5:00 மணி: அன்றைய நாளின் கழிவை உடலில் இருந்து பிரித்து எடுத்து, சிறுநீர் பையில் தேக்கி வைக்கும் பணி நடைபெறும்.

மாலை 5:00 - 7:00 மணி: இந்த நேரத்தில் இளஞ்சூடான உணவுகள், திரவ உணவுகள் சாப்பிடலாம். உடற்பயிற்சி செய்வது சிறுநீரகங்களுக்கு நல்லது.

இரவு 7:00 - 9:00 மணி: இந்த நேரத்தில் மிதமான, எளிதில் செரிக்கக் கூடிய உணவுகளை எடுத்துக் கொள்ளலாம்.

இரவு 9:00 - 11:00 மணி: உடலின் வெப்பத்தை சமன் செய்யும் நேரம். எண்ண ஓட்டங்கள் இன்றி, அமைதியாக உறங்க வேண்டும்.

இரவு 11:00 - அதிகாலை 1:00 மணி: இந்த நேரத்தில் இரவு உணவு சாப்பிடவே கூடாது. துாங்காமல் விழித்திருந்தால் பித்தப்பை செயல்பாடு தடைபட்டு, கற்கள் உருவாக வாய்ப்பாக அமையும்.