மதிப்பெண் கொண்டு மதிப்பிடக்கூடாது.. மாணவர்களை ஒப்பிடுதல் கூடவே கூடாது!
பொதுதேர்வுகளிலும், நுழைவுத் தேர்வுகளிலும் மாணவர்கள் பெறும் மதிப்பெண் அடிப்படையிலேயே உயர்கல்வி நிறுவனங்களில் சேர்க்கை நடைபெறுகிறது.
மற்றவர்களுடன் ஒப்பிடுதல் அல்லது இவ்வளவு மதிப்பெண் எடுத்தால்தான் குறிப்பிட்ட கல்லூரியில் இடம் கிடைக்கும் என்பன போன்ற பேச்சுகளை தவிர்ப்பது நல்லது.
ஏற்கெனவே மாணவர்கள் தேர்வு ரிசல்ட் குறித்த அச்சத்தில் இருப்பார்கள். இந்தச் சூழலில் பெற்றோர்,குழந்தைகள் மீது மேலும் அழுத்தத்தை திணிக்காமல் அவர்களுக்கு அதரவு அளித்து ஊக்குவிக்க வேண்டும்.
பிள்ளைகளிடம் தோழமையுடன் பழகி அவர்களின் தன்னம்பிக்கையை அதிகரிக்க வேண்டும்.
ஒரு தேர்வு முடிவு அவர்களின் கனவுகள் மற்றும் திறமையை பறித்துவிடாது. வெறும் தேர்வுதான் வாழ்வில் இதைவிட பெரிய நிகழ்வுகள் உள்ளதை எடுத்துக்கூறுங்கள்.
உலக அறிவை வளர்த்துக்கொள்வது மிக அவசியம். ஆகையால், இதர திறன் வளர்ப்புகளுக்கும், வாழ்க்கைக்கு தேவையானவற்றை கற்றுக்கொடுப்பதற்கும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.
ஒரு மாணவரது செயல்பாடுகளை மற்றொரு மாணவருடன் ஒப்பீடு செய்வது ஒருபோதும் கூடாது. ஏனெனில், ஒவ்வொரு மாணவரும் பிரத்யேக திறன் படைத்தவர்கள்.