முதியோர் மூளைக்கு தவறான சமிக்ஞை தரும் ஸ்கிரீன் டைம்!
பணியிலிருந்து ஓய்வு பெற்றவர்கள், முதியவர்கள் எல்லா நேரமும் சமூக வலைதளங்களை பார்ப்பதால், 'ஸ்கிரீன் டைம்' அவர்களை பொருத்தவரை அதிகம்.
வயதானால் இயல்பாக துாங்க முடிவதில்லை. அதனால் தான் மொபைல் போன் பார்க்கிறோம் என்பர்.
மொபைல் போன் அதிக நேரம் பார்ப்பதால் தான் துாக்கமின்மை ஏற்படுகிறது. துாக்கமின்மையும், மொபைல் போனும் ஒன்றுக்கொன்று தொடர்பு உடையவை.
இரவு நேரத்தில் அரை மணி நேரம் மொபைல் போன் பார்த்தாலும், துாக்கத்தை வரவழைக்கச் சுரக்கும் 'மெலடோனின்' என்ற ஹார்மோன் சுரக்காது.
சில சமயங்களில் தேவையை விட மிகக் குறைவாக சுரக்கும். இது பகலா, இரவா; இவரை துாங்க வைக்க வேண்டுமா, வேண்டாமா என்ற ரீதியில் மூளைக்கு குழப்பமான சமிக்ஞை செல்லும்.
இது துாங்கும் நேரம் தான் என்பதை அறிவுறுத்தி, துாங்க முயற்சி செய்தாலும், துாக்கம் வருவதற்கு வெகு நேரமாகும்.
பிணியிலிருந்து ஓய்வு பெற்றவர்கள், துாங்குவதற்கு குறைந்தபட்சம் இரண்டு மணி நேரத்திற்கு முன் மொபைல் போன் பார்க்காமல் இருப்பது, ஆழ்ந்த துாக்கத்திற்கு நிச்சயம் உதவும்.