அலுப்பு, சோர்வா இருக்கா.. உற்சாகம் பெற சில டிப்ஸ்...
அலுப்பு, சோர்வு ஆகியவை உடல் மற்றும் மனதினை பாதிப்பதோடு, அந்த நாளையே உற்சாகமில்லாமல் இருக்க செய்யும். சோர்வை போக்க என்ன செய்யலாம் என தெரிந்து கொள்வோமா…
தினமும் காலையில் எழுந்ததும், ஏதேனும் ஓர் உடற்பயிற்சியை செய்து வந்தால், நாள் முழுவதும் சோர்வின்றி சுறுசுறுப்புடன் இயங்கலாம்.
யோகா, சைக்கிளிங், ரன்னிங், வாக்கிங் போன்ற பயிற்சிகள் அன்றாடம் மேற்கொண்டால் நல்ல மாற்றம் ஏற்படும்.
நீரேற்றமாக இருப்பது மிகவும் அவசியம். தினமும் குறைந்தது 2 - 2 1/2 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டியது அவசியம்.
உடலில் பித்தம் அதிகரித்தாலும் சோர்வை உண்டாக்கும். பித்த உடல்வாகு கொண்டவர்கள், தினமும் காலையில் இஞ்சி, இரவில் கடுக்காய் சாப்பிடுவது அன்றைய தினம் முழுவதற்கும் உற்சாகம் தரும்.
உடல் எடை அளவுக்கு அதிகமாக இருந்தால், உடலில் ஆற்றல் குறையக்கூடும். எனவே, உடலை டய்ட், உடற்பயிற்சி மூலம் பிட்டாக வைக்க வேண்டும்.
ஆரோக்கியமான உணவுகளை உண்ணுவது நல்ல உற்சாகமாக இருக்க உதவும். குறிப்பாக காலை உணவை தவறாமல் சாப்பிட வேண்டும். பொரித்த உணவுகளைத் தவிர்க்க வேண்டும்.
தினமும் ஒரே மாதிரியான நேரத்தில் தூங்கி எழும் பழக்கத்தை ஏற்படுத்தி கொள்ள வேண்டும். அதுவும் இடையூறு இல்லாத 7 - 8 மணி நேர இரவுத் தூக்கம் இருந்தால், காலை உற்சாகமாக விடியும்.
இதையும் தாண்டி அலுப்பு, சோர்வு தொடர்ந்து இருந்தால், மருத்துவரை அணுகி முதலில் அதற்கு முறையான சிகிச்சை பெற வேண்டும்.