ஆஸ்துமாவிற்கு நிவாரணம் தரும் கோதுமை... மார்பு சளியையும் போக்கும்!
ஆஸ்துமா நோயாளிகளுக்கு வீட்டில் உள்ள சில உணவுப் பொருட்களைக் கொண்டு மார்புச் சளியை கரைக்க முடியும். அதில் கோதுமைக்கு முக்கிய பங்கு உண்டு. அவற்றை குறித்து அறிந்துக்கொள்வோம்.
முழு கோதுமையை வறுத்து துாளாக்கி, வெந்நீர் சேர்த்து, வடிகட்டிய நீருடன் பால் சேர்த்து சாப்பிட கபம் கட்டாது.
வறுத்த கோதுமை மாவை தேன் சேர்த்து பிசைந்து சாப்பிடுவது மூட்டு வலி, முதுகு வலிக்கு நல்லது.
தேங்காய் எண்ணெயில் சூடத்தைப் போட்டு சூடாக்கி, மார்பின் முன், பக்கவாட்டு, பின் முதுகில் தடவி, கோதுமை தவிட்டை துணியில் முடிந்து சூடாக்கி, ஒத்தடம் கொடுப்பதால் கபம் உருகிவிடும்.
கோதுமை மாவை களியாக்கி வேப்பெண்ணெய் சேர்த்து மார்பிலும் முதுகிலும் தடவி கட்டிவிட, கெட்டிப்பட்ட சளி இளகி மூச்சுத் திணறல் குறையும்.
அதேபோல் அரிசி மாவுடன் கால் பங்கு சுக்கு துாள், சிறிது வேப்பெண்ணெய் கலந்து மார்பிலும், முதுகிலும் பற்று போட்டு, அதிகபட்சம் இரண்டு மணி நேரம் வைத்தால், கரையாத மார்புச் சளியும் கரைந்து வெளியேறும்.