கர்ப்ப காலத்தில் மலச்சிக்கலை தவிர்க்க சில டிப்ஸ்கள் !
கர்ப்ப காலத்தில் மலச்சிக்கல் என்பது கர்ப்பிணிகள் பலரும் சந்திக்கக்கூடிய பிரச்னைகளில் ஒன்றாகும்.
புரொஜெஸ்ட்ரான் ஹார்மோன் அதிகரிக்கத் துவங்கும்போது, தசைகள் தளர்த்தப்படுகிறது. இவை குடலை பொறுமையாக இயக்குவதால், செரிமானமும் மெதுவாகும். இது தொடரும்போது மலச்சிக்கல் உண்டாகிறது.
காய்கறிகள், கீரைகள், பீன்ஸ், பட்டாணி, பயறு வகைகள் போன்ற நார்ச்சத்து அதிகமுள்ள உணவுகள் மலச்சிக்கலை தடுக்க உதவும். கர்ப்பிணிகளுக்கு வைட்டமின்கள், ஆக்ஸிஜனேற்றங்களை இவை அளிக்கிறது.
கர்ப்ப காலத்தில் மலச்சிக்கலை தவிர்க்க விரும்பினால் உடலை நீரேற்றமாக வைத்திருக்க வேண்டும். அடிக்கடி சிறுநீர் போக வேண்டியுள்ளதே என தண்ணீர் குடிப்பதை தவிர்த்தால் அது மலச்சிக்கலை ஏற்படுத்தும்.
கர்ப்பகாலத்தில் செரிமான பிரச்னை இருக்கும் பெண்கள் உணவை பிரித்து எடுத்துக்கொள்ளலாம். இது குடல், பெருங்குடலுக்கு உணவை சீராக அனுப்ப அனுமதிக்கும்; மலச்சிக்கல் பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும்.
உடற்பயிற்சி செய்வதன் மூலம் குடல் இயக்கங்கள் தூண்டப்படுகின்றன. எனவே, டாக்டரின் ஆலோசனையின் பேரில் கர்ப்பிணிகள் எளிய உடற்பயிற்சிகள் செய்யலாம். குறைந்தபட்சமாக வாக்கிங் செல்ல முயற்சிக்கலாம்.