இரவில் பிரா அணியலாமா?

வளர் இளம் பருவத்தில் பெண்களுக்கு மார்பக வளர்ச்சி துவங்கியவுடன், பிரா அணியும் பழக்கம் ஏற்படுகிறது. அது அவர்களுக்கு எல்லா வகையான உடை அணிய ஏதுவாக இருக்கிறது.

பிரா அணியும்போது இயல்பாக இருக்க உதவுகிறது. அதனால் அதன் அவசியம் அறிந்து, சரியான சைஸ் பயன்படுத்தலாம்.

ஆனால் நாள் முழுவதும் பிரா அணிவதால் சிலருக்கு தளும்பு, அரிப்பு போன்ற பிரச்னைகளும் ஏற்படும். அது மட்டுமல்லாமல் இரவில் பிரா அணியலாமா என்ற குழப்பமும் பெண்களிடம் உள்ளது.

தூங்கும் போது பிரா அணிவது உங்கள் ஆரோக்கியத்துக்கு கேடு விளைவிக்கும் என எந்த ஆய்வும் நிரூபிக்கவில்லை அதற்கு மருத்துவ ஆதாரங்களும் இல்லை என்பதே உண்மை.

தோல் எரிச்சல், அசௌகரியம் மற்றும் இறுக்கத்தால் வலி இருந்தால் மட்டும் இரவில் பிராவை தவிர்க்கலாம். இது முற்றிலும் ஒருவரின் விருப்பத்தைப் பொறுத்தது.

ஆனால் இரவில் பிரா அணிவது கனமான மார்பகங்களைக் கொண்டவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். மார்பக இயக்கத்தை கட்டுப்படுத்த உதவும். தோய்வினால் ஏற்படும் வலியிலிருந்து காக்கும்.

இரவில் நல்ல தரமான காட்டன் பிரா அணிவது, எரிச்சல், வியர்வை போன்ற பிரச்னையிலிருந்து காக்கும். மிகவும் காற்றோட்டமாக இருக்கும்.

பிரா அணிவதால் மார்பகம் தொங்குவதைத் தடுக்கலாம் எனபது மருத்துவர்களின் அட்வைஸ். இளம்தாய்களின் மார்பகங்கள் சற்று பெரிதாகி தொய்வு ஏற்பட வாய்ப்புள்ளதால் இறுக்கமான பிரா அணியலாம்.