கட்டுப்படுத்தப்படாத சர்க்கரை உள்ளவர்களுக்கு சைலன்ட் ஹார்ட் அட்டாக் வருமா?
மாரடைப்பு ஏற்படும் முன், தோன்றும் அறிகுறிகள் சர்க்கரை பாதிப்பு உள்ளவர்களுக்குத் தோன்றாது.
என்ன நடக்கிறது என்பதை உணரும் முன்னரே சர்க்கரை நோயும், மாரடைப்பும் இணைந்து உயிரை போக்கி விடும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.
சிலர் மாரடைப்பை தசை வலி, வாய்வு பிடிப்பு, அல்சர், வைரஸ் என்று தவறாக அனுமானித்து, வீட்டிலேயே பலர் உயிரிழப்பதாக கூறப்படுகிறது.
30 - 40 சதவிகிதம் வரை சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு, மாரடைப்பு வந்தாலும் நெஞ்சுவலி வராது. இதை சைலன்ட் ஹார்ட் அட்டாக் என அழைக்கின்றனர்.
இடது தோள்பட்டைக் குடைச்சல், இடது கை வலி, வியர்வை இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுகி, இ.சி.ஜி., பரிசோதனை செய்ய வேண்டும்.
அதிக வியர்வை, தலை சுற்றல், கழுத்துவலி, மேல்வயிறு வலி ஆகியவை இருந்தால் உடனடியாக மருத்துவமனைக்குச் செல்ல வேண்டும்.
இதயத்தின் உள்பகுதியில், மாரடைப்பு வந்தால் வயிற்று புண், வலி ஆகியவற்றுக்கு இருக்கும் அறிகுறிகள் இருக்கும். எந்த வகையான நெஞ்சுவலி வந்தாலும், உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.